சினிமா செய்திகள்

அடுத்த மாதம் வெளியாகும் எனை நோக்கி பாயும் தோட்டா?

Published

on

இதே போன்ற செய்தியை கடந்த இரு ஆண்டுகளாக நீங்கள் படித்துள்ளீர்கள் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

அதற்கான பதிலை இயக்குநர் கெளதம் மேனன் தான் கூற வேண்டும். ஆனால், இம்முறை நிச்சயமாக அடுத்த மாதம் படம் வெளியாகி விடும் என படக்குழு நம்பிக்கையாக தெரிவித்துள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு தற்போது யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், படம் அடுத்தமாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடிப்பில் பேட்ட மற்றும் வந்தா ராஜாவாதான் படங்கள் முன்னதாக ரிலீசாகி உள்ளன. வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் கேத்ரின் தெரசாவை விட மோசமாக நடித்திருந்த மேகா ஆகாஷ், கெளதம் மேனன் படத்தின் நாயகிக்கான வசீகரத்துடன் ரசிகர்களுக்கு விருந்து கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருக்கத்தான் செய்கிறது.

seithichurul

Trending

Exit mobile version