இந்தியா

கிரிப்டோ கரன்சிக்கும், இந்தியாவின் டிஜிட்டல் கரன்சிக்கும் என்ன வேறுபாடு?

Published

on

உலகமெங்கும் வலம் வந்து கொண்டிருக்கும் கிரிப்டோகரன்சிக்கும், இந்திய அரசு அறிமுகம் செய்யவுள்ள டிஜிட்டல் கரன்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

இன்று மத்திய பட்ஜெட்டில் இந்தியா சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் கரன்சி கிரிப்டோகரன்சி கிடையாது. கிரிப்டோகரன்சி என்பதற்கும் டிஜிட்டல் கரன்சி என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

இந்தியா கொண்டுவர உள்ள டிஜிட்டல் கரன்சி டிஜிட்டல் என்பது கிரிப்டோகரன்சி மாதிரி என்றாலும் கிரிப்டோகரன்சி கிடையாது. கிரிப்டோகரன்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பிட்காயினை அனுப்ப வேண்டுமென்றால் அந்த பரிவர்த்தனையை யாராலும் தடுக்க முடியாது மற்றும் மேற்பார்வையிட முடியாது. ஆனால் இந்திய அரசு கொண்டு வரப் போகும் டிஜிட்டல் கரன்சி ரகசிய பணம் அல்ல, இது முழுக்க முழுக்க ரிசர்வ் வங்கியின் மெற்பார்வையில் பரிவர்த்தனை நடைபெறும். ஆனால் டிஜிட்டல் வங்கிகளுக்கு சில உரிமைகள் வழங்கப்படும்.

இந்த டிஜிட்டல் கரன்சிகளால் ரூபாய் நோட்டுகளுக்கு எந்த பாதிப்பும் வராது. டிஜிட்டல் கரன்சியையே இந்திய ரூபாய் நோட்டு கொடுத்துதான் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு வாங்கிய டிஜிட்டல் கரன்சியை மற்றவர்களுக்கு பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதற்கென தனியாக டிஜிட்டல் வங்கிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய கரன்சி கொடுத்து தங்கம் வாங்குவது போல், பங்குகள் வாங்குவது போல் இந்த டிஜிட்டல் கரன்சியி வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version