வணிகம்

ஆவின் பால் பாக்கெட் வெவ்வேறு நிறத்தில் இருக்கக் காரணம் என்ன? எந்த பாக்கெட் பால் உங்களுக்கு ஏற்றது?

Published

on

நகர்ப் பகுதிகளில் மாட்டுப் பால் என்பது மறந்து ஆவின் பால் என்ற நிலைக்குச் சென்றுவிட்டது. தமிழ்நாடு அரசின்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் (Aavin)பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் நிறுவனம் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம். அதன் கீழ் தமிழக மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பால் பிராண்ட் தான் ஆவின்.

ஆவின் பால் பாக்கெட்கள் நீலம், பச்சை, மெஜந்தா, பழுப்பு ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த ஒவ்வொரு வண்ணங்களுக்குப் பல வித்தியாசங்கள் உள்ளன. அவை குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

நீல நிறம் ஆவின் பால் பாக்கெட்

ஆவின் நீலம் நிறப் பால் பாக்கெட் toned milk (சமன்படுத்திய பால்) என அழைக்கப்படுகிறது. 500 மில்லி லிட்டர் ஒரு பால் பாக்கெட்டில் 3 % கொழுப்பு உள்ளது.

மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட்

500 மில்லி லிட்டர் மெஜந்தா / பிங்க் ஆவின் பால் பாக்கெட்டெல் 1.5 % கொழுப்பு உள்ளது. இதை டையட் பால் பாக்கெட் என்று அழைக்கிறார்கள். இது ஒரு இருநிலை சமன்படுத்திய பால் ஆகும்.

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்

500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் 4.5 % கொழுப்பு இருக்கும். இதை நிலைப்படுத்திய பால் பாக்கெட் என்றும் கூறுகின்றனர்.

பழுப்பு நிற ஆவின் பால் பாக்கெட்

500 மில்லி லிட்டர் ஆவின் பச்சை நிற பாக்கெட்டில் 6 % கொழுப்பு இருக்கும். இதுவே முழுக் கொழுப்பு செறிந்த பால் ஆகும்.

எந்த பாக்கெட் பால் உங்களுக்கு ஏற்றது?

இப்போது நீங்கள் வீட்டில் எந்த பால் பால்க்கெட் வாங்குவது என்று குழம்பி உள்ளீர்கள் அல்லவா? பொதுவாக வீட்டில் கொழுப்பு குறைந்த மெஜந்தா மற்றும் நீல நிற பால் பாக்கெட்களை பயன்படுத்துவதே சிறந்தது என்கின்றனர்.

6 சதவீதம் கொழுப்பு உள்ள பால் பாகெட்களை டீ கடைகளில் அல்லது வீட்டு விசேஷங்களின் போது பயன்படுத்தலாம். அப்போது நாம் பாலில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அடர்த்தியாக இருக்கும். வீட்டில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருந்தால் ஆவின் நீல நிற பால் பாக்கெட் பயன்படுத்தலாம். அது குழந்தையின் எடை குறைவாக இருந்தால் 4.5 சதவீதம் கொழுப்பு உள்ள பால் பாக்கெட் பயன்படுத்தலாம்.

அடுத்த முறை நீங்கள் பால் பாக்கெட் வாங்க செல்லும் போது இதைப் பார்த்துக் கவனித்து வாங்குவீர்கள் என்று நம்புகிறேன். முழு விவரங்கள்…

Trending

Exit mobile version