தமிழ்நாடு

தமிழக அரசின் ‘மக்கள் ஐடி’ என்றால் என்ன? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

Published

on

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் கார்டு என்ற ஒரு ஐடி இருக்கும் நிலையில் தமிழ்நாடு அளவில் ‘மக்கள் ஐடி’ என்று சொல்லக்கூடிய ஒரு அடையாள அட்டையை தமிழக அரசு உருவாக்க போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மத்திய அரசால் ஆதார் அட்டை என்ற தனிநபர் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் அந்த ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும் அத்தியாவசியமான தேவை என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக ஒரு மொபைல் போன் வாங்க வேண்டும் என்றாலோ, சிம் கார்டு வாங்க வேண்டும் என்றாலோ, பான் கார்டு, வங்கி கணக்கு, சமீபத்தில் மின் அட்டை உள்பட அனைத்திலுமே ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அதை இணைப்பதன் மூலம் ஒரு மிகப்பெரிய டேட்டாவை இந்திய அரசு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு மாநில அரசு ‘மக்கள் ஐடி’ என்ற ஒரு அடையாள அட்டையை உருவாக்க போவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று மாநில அரசு கணித்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம். ஒரு மாநில அரசு என்பது ஒவ்வொரு துறையிலும் ஒருசில நல்ல திட்டத்தை அறிமுகம் செய்திருக்கும். எல்லா துறைகளின் நலத்திட்டங்களின் டேட்டாவை அந்தந்த துறைகள் பாதுகாத்து வைத்துக்கொள்ளும். ஆனால் ‘மக்கள் ஐடி’ என்ற ஒரு அடையாள அட்டை வந்தால் அனைத்து துறைகள், அதன் நலத்திட்டங்கள் ஆகியவற்றை ஒரே ஐடி மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் ஒவ்வொரு தமிழக மக்களும் எந்தெந்த நலத் திட்டங்களால் பயன் பெறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் இந்த ‘மக்கள் ஐடி’ என்ற ஒரு அடையாள அட்டை என்று கூறப்படுகிறது.

‘மக்கள் ஐடி’ என்பது அரசுக்கும் தமிழக மக்களுக்கும் இடையே ஏற்படும் ஒரு பாலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ‘மக்கள் ஐடி’ 12 இலக்கங்களை கொண்டு இருக்கும் என்றும், இதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கும் திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் இதற்கான டெண்டர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மின் ஆளுமை அமைப்பின் மூலம் இந்த மக்கள் ‘மக்கள் ஐடி’ உருவாக்க இருப்பதாகவும், இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப் போவதாகவும் இந்த மென்பொருள் தயாரானவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘மக்கள் ஐடி’ தயாரான பின் மின் ஆளுமை முகமை மூலமாக மாநில அரசின் ‘மக்கள் ஐடி’ அனைத்து தமிழக மக்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசால் நடைமுறைப் அப்புறம் இந்த ‘மக்கள் ஐடி’ தற்போது திமுக அரசால் அறிமுகப்படுத்தப் படுகிறதா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். கடந்த ஆட்சியில் அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசினால் இந்த ‘மக்கள் ஐடி’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திமுக அரசு மீண்டும் மக்கள் ஐடியை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. ஆதார் என்பது இந்திய அளவில் உள்ள ஒரு அடையாள அட்டையாக இருக்கும் நிலையில் தமிழக அரசு தமிழக மக்களுக்காக உருவாக்கப்படும் இந்த அடையாள அட்டையால் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தமிழக மக்களுக்கு மட்டுமே உதவும் வகையில் இருக்கும்.

குறிப்பாக வட மாநிலத்தவர் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வரும் நிலையில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் தமிழர்களுக்கு மட்டும் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த ‘மக்கள் ஐடி’ என்ற அடையாள அட்டையை மாநில அரசு உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த ‘மக்கள் ஐடி’ என்ற அடையாள அட்டைக்கு தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் வரக்கூடிய நாட்களில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்றும், தமிழக மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை தமிழக அரசு எதிர்க்கட்சிகளுக்கு விளக்கி கூறி அவர்களை சம்மதிக்க வைக்குமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version