சினிமா செய்திகள்
என்னது சிம்ரன், த்ரிஷாவுக்கு சுகரா?
![EAIcGtXUYAAxFIN - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/07/EAIcGtXUYAAxFIN.jpg)
ஜோடி படத்தில் சிம்ரனின் முகம் தெரியா தோழியாக நடித்திருப்பார் த்ரிஷா, அதற்கு பிறகு இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளாக வலம் வந்தும் வந்து கொண்டும் இருக்கின்றனர்.
இந்த ஆண்டு துவக்கத்தில், ஜோடி படத்திற்கு பிறகு ரஜினியின் பேட்ட படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
ஆனால், இருவருக்குமான நேரடி காட்சிகள் படத்தில் இல்லை. இந்நிலையில், சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வரும் படத்தில் இவர்கள் இருவரும் சகோதரிகளாக நடித்து வருகின்றனர். மேலும், அந்த படத்திற்கு ’சுகர்’ என அதிரடியாக தலைப்பிட்டுள்ளனர்.
தலைப்புக்கான காரணம் படம் வெளியானதும் அல்லது டீஸர், டிரைலர் வெளியானவுடன் தெரிய வரலாம்.
மேலும், இந்த படத்தில் சதிஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை, கேரளா, தாய்லாந்து போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் படு பிசியாக நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்ஸ்கள் வரும் என எதிர்பார்கிறோம்.