உலகம்

ஒரே கொள்கை வேறுபட்ட கருத்து.. இந்திய கொள்கைகள் குறித்து இந்திய அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள்?

Published

on

புதுடெல்லி: இந்திய அமெரிக்கர்கள் மத சிறுபான்மையினரின் பாதுகாப்பைப் பாதிக்கும், குடியேற்றம் போன்ற இந்திய கொள்கைகளில் அமெரிக்காவை விட ஒப்பீட்டளவில் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிகள் கூறியுள்ளன.

சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1200 இந்திய அமெரிக்க பெரியவர்களிடம் ஆன்லைன் வாயிலாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தரவுகளை வழங்குகிறது இந்த ஆய்வு.

இந்த சர்வேயில் பதிலளித்தவர்களில் 90 சதவீதம் பேர் அணைத்து மத நம்பிக்கைகளையும் சமமாக நடத்துவதை ஆதரித்துள்ளனர். இவர்களில், 60 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த முஸ்லீம் நாடுகளுக்கான பயண தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் அதில் 49 சதவீதம் பேர் மட்டுமே இந்திய அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்தனர். இதேபோல, 69 சதவீதம் பேர் தாராளவாத குடியேற்றக் கொள்கைகளின் கருத்தை ஆதரித்தனர். அவர்களில் 45 சதவிகிதத்தினர் மட்டுமே இந்திய அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சர்ச்சைக்குரிய அகில இந்திய என்.ஆர்.சி பயிற்சியை எதிர்ப்பதாக சுட்டிக்காட்டினர். 55 சதவீதம் பேர் அமெரிக்காவில் குறைந்த கடுமையான கொள்கைகளை ஆதரித்துள்ளனர்.

இன பெரும்பான்மை பற்றிய கேள்விகளுக்கு, 73 சதவீதம் பேர் அமெரிக்காவில் வெள்ளை மேலாதிக்கம் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக கருதுகின்றனர். அவர்களில் 53 சதவீதம் பேர் இந்தியாவில் இந்து பெரும்பான்மையை சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள். அவர்களுடைய பதிலை மதநம்பிக்கையால் பகுப்பாய்வு செய்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 சதவீதம் இந்துக்களும், 79 சதவீதம் மற்ற மதத்தினரும் வெள்ளை மேலாதிக்கத்தை அமெரிக்காவில் அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர், அதில் 40 சதவிகிதத்தினர் இந்தியாவில் இந்து பெரும்பான்மையை பார்க்கிறார்கள், மற்ற மதத்தினரில் 69 சதவிகித்தனர் அப்படி கருதுகின்றனர்.

மேலும் அவர்களிடம் இந்தியா இப்போது எதிர்கொள்ளும் 3 முக்கியமான சவால்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் முதலில் அரசாங்கத்தில் இருக்கும் ஊழல் என்று 18 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இரண்டாவது இடத்தில் பொருளாதாரத்தின் நிலை என்று 15 சதவிகிதமும், மூன்றாவது இடத்தில் மத பெரும்பான்மை 10 சதவிகிதம் பெரும் பதில் கூறியுள்ளனர்.

சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக இந்திய ராணுவத்தை அமெரிக்கா வலுப்படுத்துவது குறித்து இந்திய அமெரிக்கர்கள் இடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 7 சதவிகிதம் பேர் இதை பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக கருதுகின்றனர். வெளிநாட்டிலிருந்து பிறந்தவர்களில் 53 சதவீதம் பேரும், அமெரிக்காவில் பிறந்தவர்களில் 38 சதவீதத்தினரும் மட்டுமே அந்த நடவடிக்கையை ஆதரித்தனர். இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் ஒட்டுமொத்த ஆதரவைப் பொறுத்தவரை, 40 சதவீதம் பேர் தற்போதைய உறவு சரியானது என்று நம்புகிறார்கள், அதே நேரத்தில் 12 சதவீதம் பேர் அமெரிக்கா மிகவும் ஆதரவாக இருப்பதாக நம்புகின்றனர். 24 சதவீதம் பேர் அமெரிக்கா போதுமான அளவு ஆதரவு வழங்கவில்லை என்று நம்புகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்திறனை இந்திய-அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் ஒப்புக்கொள்கிறார்கள். இது விருப்பமான கட்சியை தேர்வு செய்வதிலும் எதிரொலித்துள்ளது. பதில் கூறியவர்களில் 32 சதவீதம் பேர் பாஜக கட்சியைத் தேர்வு செய்கிறார்கள், 12 பேர் மட்டுமே காங்கிரஸைத் தேர்வு செய்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version