பல்சுவை

இன்று முதலாம் உலகப் போர் தொடங்கிய தினம்!

Published

on

1851

1981-ம் ஆண்டு முதல் முறையாக முழு சூரிய கிரகணத்தை ஜோஹன் ஜூலியஸ் ஃப்ரீட்ரிக் பெர்கோவ்ஸ்கி டாகுரோடைப் புகைப்படமாக எடுத்த தினம் இன்று. இதுதான் உலகின் முதல் சூரிய கிரகணத்தின் முதல் படம்

1914

1914-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி தொடங்கப்பட்ட முதல் உலகப்போர், 1918 நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற்றது.

1921

இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக நவம்பர் மாதம் வேல்ஸ் இளவரசரின் வருகையைப் புறக்கணிக்க இந்திய தேசிய காங்கிரஸ் முடிவு செய்த தினம்.

1932

உலகின் முதல் முழு நீள ஜாம்பி திரைப்படம் (White Zombie) அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தினம்.

1943

இத்தாலிய பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவி விலகிய தினம்.

1951

வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் இசைத் திரைப்படம் “ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்” வெளியிடப்பட்ட தினம்.

1976

சீனாவின் தொழில் நகரமான டாங்ஷானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,40,000க்கும் அதிகமானோர் உயிரிழந்த தினம்.

1979

இந்தியாவின் 5வது பிரதமராக சவுத்ரி சரண் சிங் பதவியேற்ற தினம்

seithichurul

Trending

Exit mobile version