தமிழ்நாடு

பேராசிரியர் க.அன்பழகனுக்கு என்ன ஆச்சு!

Published

on

நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியருக்கு மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது. அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என குறிப்பிட்டார்.

இதனையடுத்து பேராசிரியர் அன்பழகன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடல் நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டொரு நாட்களில் உடல் நலம் தேறி அன்பழகன் இல்லம் திரும்ப இருப்பதால் திமுக நிர்வாகிகள் யாரும் நேரில் வர வேண்டாம் என்று அறிக்கை மூலமாகவும் தெரிவித்தார் ஸ்டாலின்.

அப்படி அவருக்கு என்ன ஆச்சு? பொதுவாக நாட்டு மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் உடையவர் அவர். தற்போது அலோபதி மருந்துகளை கடந்த சில நாட்களாக எடுத்து வருகிறார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் இரண்டு நாட்களுக்கு முன்னர் உணவு எடுத்துக்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டுள்ளார்.

மேலும் பாத்ரூம் செல்வதிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட அன்று மாலையே அவருக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தான் அவரது மகன் அனுபு செழியன் அவரை நேற்று முன்தினம் மாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version