தமிழ்நாடு

நள்ளிரவு பரபரப்பு: முருகதாஸ் வீட்டில் போலீசார்!

Published

on

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இருப்பதால் இதனை அதிமுகவினர் கடுமையாக எதிர்க்கின்றனர். அமைச்சர்கள் நேரடியாக எச்சரிக்கை விடுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ்-ஐ கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று இரவு 10.30 மணிக்கு டுவீட் செய்தது. பின்னர் சிறிது நேரம் கழித்து முருகதாஸைப் பற்றி போலீசார் விசாரித்துவிட்டு அவர் இல்லை என்பதால் சென்றுவிட்டனர் என்று மற்றொரு பதிவை வெளியிட்டது.

இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் காவல்துறை சார்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கமான பாதுகாப்பு பணிக்காகத்தான் சென்றதாகவும், முருகதாஸை கைது செய்ய செல்லவில்லை எனவும் காவல்துறை விளக்கம் அளித்தது. இந்நிலையில் இயக்குநர் முருகதாஸ் இது குறித்து தெரிவித்தபோது, நள்ளிரவு 12 மணியளவில் எனது வீட்டுக்கு வந்த போலீசார் கதவை பலமுறை தட்டியுள்ளனர். நான் அங்கு இல்லை என்று தெரிந்ததும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். தற்போது அங்கு எந்த போலீஸும் இல்லை என டுவிட்டரில் தெரிவித்தார்.

Trending

Exit mobile version