சினிமா செய்திகள்

நடிப்பை கைவிட்ட லட்சுமி மேனன் இப்ப என்ன பண்றாரு தெரியுமா?

Published

on

படவாய்ப்புகள் குறைந்ததால் டான்ஸ் கிளாஸ் நடத்தி வருகிறார் நடிகை லட்சுமி மேனன்.

மலையாள படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு சுந்தர பாண்டியன், குட்டிப்புலி என்று பல படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு ஜிகர்தண்டா படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் மேலும் ஒருபடி உயர்ந்து அஜித்துக்கு தங்கையாக வேதாளம் படத்தில் நடித்தார்.

இவ்வாறு இருந்த பட்சத்தில் தான் படிக்கப் போவதாக சொன்ன லட்சுமி மேனன் உடல் இடை அதிகரித்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இவர் இறுதியாக நடித்துள்ள படம் யங் மங் ஜங் அந்த படமும் இன்னும் திரைக்கு வரவில்லை.

இதனால் அடிப்படையில் நடன கலைஞரான லட்சுமி மேனன் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நடனம் சொல்லி தந்து வருகிறார். விரைவில் பெரிய நடனப்பள்ளி தொடங்கயிருக்கிறார்.

Trending

Exit mobile version