தமிழ்நாடு

10thக்கு பிறகு என்ன படிக்கலாம்: மாணவர்களுக்கு ஒரு அறிவுரை

Published

on

மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு என்பது ஒரு முக்கியமான கட்டமாகும். பத்தாம் வகுப்பிற்கு பின்னர் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அடுத்தகட்ட படிப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிடெக்னிக் படிக்க வேண்டும் என்று விருப்பபடும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரலாம். அதன் பின்னர் அவர்கள் நேரடியாக பி.ஈ.2-ம் ஆண்டு சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்க வேண்டுமென்றால் பிளஸ் ஒன் பிளஸ் டூ படித்து அதன் பின்னர் தாங்கள் விரும்பும் பட்டப் படிப்புகளில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க விரும்புபவர்கள் பிளஸ் ஒன், பிளஸ் டூ தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடிட்டர் போன்ற பணிகளில் சேர விரும்புபவர்களும் பிளஸ் ஒன் பிளஸ் டூ காமர்ஸ் குரூப் படிக்க வேண்டும் என்பது அவசியம் ஆகும். அதன் பிறகு அவர்கள் பிகாம் படித்து ஆடிட்டர் படிப்பை படிக்கலாம்.

எனவே பத்தாம் வகுப்பு முடிக்கும்போதே தங்களுடைய எதிர்கால திட்டம் என்பது என்ன என்பதை அறிந்து அதற்கேற்றவாறு படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். இந்த கட்டத்தில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து தங்களுடைய விருப்பத்தையும் அவர்களிடம் தெரிவித்து எதிர்காலத்தில் எந்த துறையில் வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்பதை அறிந்து அடுத்தகட்ட படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version