தமிழ்நாடு

தமிழகத்தில் திரை அரங்குகளைத் திறப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

Published

on

கோவிட்-19 ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த திரை அரங்குகளை, நவம்பர் 10-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.

இந்நிலையில், நவம்பர் 10-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். எனவே பின் வரும் விதிமுறைகளின் கீழ் தான் தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்கப்படும். எனவே திரை அரங்குகளைத் திறக்க தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) திரை அரங்கு வளாகத்தின் உள்ளும், வெளியிலும் தனிமனித இடைவெளி 6 ஆடியாக இருக்க வேண்டும்.

2) கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரை அரங்குகள் திறக்க அனுமதியில்லை.

3) முகக்கவசம் அணியாதவர்களைத் திரை அரங்கு வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது. திரை அரங்கு உள் வருவது முதல் வெளியில் செல்லும் வரை முகக் கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும்.

4) 50 சதவீதைருக்கைகளில் மட்டுமே பொது மக்கல் அமைந்து படம் பார்க்க வேண்டும்.

5) திரை அரங்குக்கு வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்களை வெளியேற்ற வேண்டும். பின்னர் அவர் வந்த இடத்தை கிருமிநாசினிகள் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.

6) ஏசி திரை அரங்கம் என்றால் வெப்ப நிலை 24 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். ஏசியின் அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

7) திரை அரங்கு நுழைவு வாயில் முதல் உள்ளே செல்லும் வரை அனைத்து இடங்களில் பார்வையாளர்களுக்குக் கிருமி நாசினிகள் வழங்கப்பட வேண்டும்.

8) கழிவறைகளையும் முன்பு எப்போது இல்லாத அளவிற்குச் சுத்தம் செய்து, கிருமிநாசினிகள் தெளிக்க வேண்டும்.

9) ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும் இரண்டு முறை சுத்த செய்ய வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version