இந்தியா

தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை சொத்துக்கள் எவை எவை?

Published

on

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனியார் மயமாக்கப்படும் பொதுத்துறை சொத்துக்களின் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இதன்படி சாலை போக்குவரத்து துறையில் 27 ஆயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை தனியார்மயம் ஆக்கப்படுகிறது. இதன்மூலம் 1.6 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும்.

அதே போல் 400 ரயில்வே நிலையங்கள், 150 ரயில்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பகம் தனியார் மயமாக்க படுவதால் 1.5 லட்சம் கோடி கிடைக்கும்.

42,300 கிலோ மீட்டர் தூரம் மின் பகிர்மானம் செய்வதன் மூலம் 67 ஆயிரம் கோடி கிடைக்கிறது.

5000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர், காற்றாலை மின் உற்பத்தி சொத்துக்கள் குத்தகைக்கு விடுவதன் மூலம் 32 ஆயிரம் கோடி கிடைக்கும்.

8000 கிலோ மீட்டர் கெயில் குழாய் எரிவாயு படிப்பதன் மூலம் 24,500 கோடி கிடைக்கும்.

4,000 கிலோ மீட்டர் வரை உற்பத்தி குழாய் பாதிப்பதன் மூலம் 22,500 கோடி கிடைக்கும்.

25 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் 20,752 கோடி கிடைக்கும்.

9 முக்கிய துறைமுகங்களில் 31 திட்டங்களை அமல்படுத்த உள்ளதை அடுத்து 12500 கோடி கிடைக்கும்.

160 நிலக்கரி திட்டங்கள் மற்றும் 761 கனிமவளப் பகுதிகள் குத்தகைக்கு விடுவதன் மூலம் 32 ஆயிரம் கோடி கிடைக்கும்.

இரண்டு தேசிய விளையாட்டு மைதானங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் 11 ஆயிரத்து 500 கோடி கிடைக்கும்.

இதேபோல் சேமிப்பு கிடங்கு மூலம் 29 ஆயிரம் கோடி மற்றும் தொலைதொடர்பு துறையில் 2.86 லட்சம் கிலோமீட்டர் பாரத்நெட் டைனர், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைப்பதால் மூலம் 39 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version