சினிமா

‘அபிராமி செய்வது அராஜகம்’: கடுப்பான சனம் ஷெட்டி!

Published

on

கலாஷேத்ரா விவகாரத்தில் நடிகை அபிராமி பேசுவது அராஜகம் என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

கலாஷேத்ரா மாணவிகள் அங்குள்ள ஆசிரியைகள் மீது பாலியல் முறைகேடு தொடர்பாக அளித்துள்ள புகார் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி பேசு பொருளாகி உள்ளது. இதில் கலாஷேத்ராவுக்கும் அங்குள்ள ஆசிரியர்களுக்கும் ஆதரவாக நடிகை அபிராமி தெரிவித்துள்ள கருத்து அவருக்கு கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.

Abhirami

இது தொடர்பாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் கொடுக்க வந்தபோது, கலாஷேத்ராவில் எந்தவிதமான பாலியல் சீண்டல்களும் நடைபெறவில்லை. இந்த விவகாரம் திரித்துக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மனுக்கு எதிராகப் பேச வேண்டுமென என்னை இரண்டு பேராசிரியைகள் வற்புறுத்தினார்கள். ஆனால், அதற்கு நான் சம்மதிக்கவில்லை. கல்லூரியில் படிக்கும் போது பாலியல் ரீதியான தொல்லைகளை நான் எதிர்கொண்டது இல்லை.

பேராசிரியர் ஹரிபத்மன் எனக்கு வகுப்பெடுத்தது வரைக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. முன்னாள் மாணவி என்ற அடிப்படையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் அமர்ந்து பேச வேண்டும். இந்த விவகாரத்தில் மாணவிகள் பலியாடாக ஆக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது” எனவும் பேசி இருக்கிறார்.

இதற்கு நடிகை சனம் ஷெட்டி ட்வீட் செய்திருப்பதாவது, ‘அபிராமி இப்படி பேசுவது அராஜகம். பேச விருப்பம் இல்லை என்றால் பேசாமல் இருங்கள். உங்களுக்கு நடக்கவில்லை என்றால், அவர்களுக்கும் அது நடக்காது என்று அர்த்தம் இல்லை. கடந்த 89 வருடங்களாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்? அங்கு உங்கள் ஆசிரியர்களின் ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் உத்திரவாதம் தர முடியுமா? ஏன் ஒரு பக்கமாக இருக்கிறீர்கள்? உண்மைக்காக காத்திருங்கள்’ என கோபம் காட்டி இருக்கிறார்.

Trending

Exit mobile version