இந்தியா

எந்த முட்டாள் உயர்த்தினாரோ, அவர்தான் குறைக்க வேண்டும்: பெட்ரோல் வரி குறித்து முதல்வர்!

Published

on

பெட்ரோல் வரியை எந்த முட்டாள் உயர்த்தினாரோ, அந்த முட்டாள் தான் குறைக்க வேண்டும் என்றும் நாங்கள் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது என்பதும் இதன் காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் ஐந்தும் டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 11ம் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய அரசை தொடர்ந்து ஒரு சில மாநிலங்களும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்க மறுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெட்ரோல் வரி குறைப்பு குறித்து பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் ’நாங்கள் பதவியேற்ற பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்படவில்லை. எந்த முட்டாள் உயர்த்தினாரோ, அவர்தான் குறைக்க வேண்டும். எங்களை குறை சொல்வது அர்த்தமற்றது என்று அவர் கூறியுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் முட்டாள் என்று யாரை கூறுகிறார் என்பது அனைவருக்கும் புரிகிறது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version