இந்தியா

மேற்குவங்க சட்டசபையை முடக்கிய ஆளுனர்: தமிழகத்திலும் நடக்கும் என ஈபிஎஸ் எச்சரிக்கை!

Published

on

மேற்கு வங்க சட்டசபையை அம்மாநில கவர்னர் முடக்கிய நிலையில் தமிழகத்திலும் அதே போன்று நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் கவர்னர் மற்றும் முதல்வர் இடையே மோதல் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்திலும், தமிழகத்திலும் கவர்னரை மாற்ற வேண்டும் என்றும் கவர்னரே தேவையில்லை என்ற குரல் ஓங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் மாநிலங்களவையில் மேற்கு வங்க ஆளுநரை திரும்பப் பெற வேண்டுமென்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் குரல் கொடுத்த நிலையில் திடீரென தனக்குரிய 174 பிரிவை பயன்படுத்தி மேற்குவங்க சட்டசபையை முடக்குவதாக மேற்குவங்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மேற்குவங்க சட்டசபை முடக்கப்படுவதாக ஆளுநர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள தமிழகத்திலும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்று குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்திலும் சட்டசபையை முடக்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version