தமிழ்நாடு

மேற்குவங்க சட்டசபையை முடக்கம்: ஆவேசமான முதல்வருக்கு அமைதியாக பதிலளித்த கவர்னர்!

Published

on

மேற்குவங்க சட்டசபையை முடக்குவதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பிய தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு மேற்குவங்க முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை மூடப்படுவதாக மேற்கு வங்க ஆளுநர் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநர் என்பவர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அப்போது தான் ஜனநாயகம் தழைக்கும் என்றும் ஒரு மாநிலத்தின் தலைவராக இருக்கும் ஆளுநர் அந்த மாநில அரசுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மேற்கு வங்க ஆளுநர், ‘மேற்கு வங்க மாநிலத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சட்டப்பேரவை முடக்கப்பட்டு உள்ளது என்றும் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டதை அடுத்தே சட்டசபை முடக்கப்பட்டது என்றும் தமிழக முதல்வரின் கடுமையான குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version