இந்தியா

West Bengal – 200 இடங்களில் மம்தா கட்சி முன்னிலை; 3வது முறையாக ஆட்சியைப் பிடிப்பாரா?

Published

on

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைத் தக்க வைத்த திரிணமுல், மூன்றாவது முறையும் வெற்றி பெறும் நோக்கில் தேர்தலை சந்தித்தது.

அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் வளர்ச்சி அடைந்துள்ள பாஜக, இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே மேற்கு வங்கத்தில் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றது பாஜக.

மதியம் 12:15 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, 202 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாஜக, 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து 3வது முறையும் மம்தா தலைமையிலான ஆட்சியே மேற்கு வங்கத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version