ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க உதவும் கஞ்சி தண்ணீர்!

Published

on

அரிசி வேகவைத்த நீரை (கஞ்சி தண்ணீர்) சூடாக எடுத்து அதில் சிறிது உப்பு, மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம். இதில் வெறும் 150 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைய பெரிதும் உதவும். மேலும் இதை குடித்தால் சாப்பிட்டது போல வயிறு நிறைவாக இருக்கும். அதோடு மலச்சிக்கல் நீக்கி, உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

அரிசி உளுந்து கஞ்சி

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி நொய் – ஒரு கிண்ணம்
கறுப்பு உளுந்து – ஒரு கைப்பிடி அளவு
சீரகம் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கவும்)
வெந்தயம் – கால் தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
மோர் – தே.அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி நொய்யுடன் 4 டம்ளர் நீர் சேர்த்து கறுப்பு உளுந்து, சீரகம், வெந்தயம், நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வேச வைக்கவும், வெந்ததும் மோர், உப்பு சேர்த்து பருகலாம்.

seithichurul

Trending

Exit mobile version