ஆரோக்கியம்

உடல் பருமனை குறைக்க காலை உணவில் இதைப் பின்பற்றுங்கள், தவிர்க்க வேண்டியவை என்ன?

Published

on

உடல் பருமனை குறைக்க வேண்டுமா? உடல் பருமனுக்கும் நமது உணவுமுறைக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாகக் கருதப்படும் ஒன்று, அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவுகளை தொடர்ந்து உண்ணுதலாகும்.

உடல் பருமன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கும், இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவை உடலின் உட்கூறுகளை பாதிக்கும். எனவே, எடையை குறைக்க விரும்புகிறவர்களுக்குக் காலை உணவு மிகவும் முக்கியமானதாகும்.

8) உடல் எடையைக் குறைத்துப் பராமரிக்க உதவும்.

காலை உணவின் முக்கியத்துவம்: ஆரோக்கியமான காலை உணவைச் சாப்பிடுவது எடை குறைக்கும் பயணத்தில் முதல் படியாக கருதப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். இதற்காக, உடலில் உள்ள கொழுப்பு கரைய, உங்கள் காலை உணவின் தேர்வுகளை கவனமாக செய்ய வேண்டும்.

முட்டை: முழுமையான புரதத்தின் மூலமாக இருக்கும் முட்டை, வயிறு நிறைந்த உணர்வை வழங்கும். முட்டையில் இருக்கும் புரோட்டீன் மற்றும் கோலின் சத்துக்கள், உடல் எடையை குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

தயிர்: தயிரில் இருக்கும் கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமானத்தை மேம்படுத்தும். குறைவான கலோரிகள் உள்ளதால், இதைச் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.

சிறுதானியங்கள்: ராகி, தினை, சோளம் போன்ற சிறுதானியங்களின் அடிப்படையிலான உணவுகள் ஆரோக்கியமானவை. இவை அதிக நார்ச்சத்துக்கள் கொண்டவை மற்றும் நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவும்.

உலர் பழங்கள் மற்றும் விதைகள்: இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

தவிர்க்க வேண்டியவை: பால் சேர்த்து சாப்பிடும் ரெடு டு ஈட் வகை தானியங்களில் சர்க்கரை அதிகமாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் இருக்கும். இது உடல் பருமனை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும்.

Poovizhi

Trending

Exit mobile version