தமிழ்நாடு

இனி வாரமிருமுறை தடுப்பூசி முகாம்: எந்தெந்த கிழமைகளில் தெரியுமா?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

தொடர்ச்சியாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் காரணத்தால் இந்தியாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதும் இன்னும் ஒரு சில மாதங்களில் கொரோனா இல்லாத இந்தியா உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை அன்றும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை லட்சக்கணக்கானவர்களுக்கு இந்த தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை எட்டு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் வரும் ஞாயிறன்று ஒன்பதாம் கட்ட தடுப்பூசி முகாம் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இனி வாரமிருமுறை தடுப்பூசி முகாம் நடத்த திட்டம் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் இதில் தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version