தமிழ்நாடு

டெல்லி-புதுவை இடையே வாராந்திர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே தகவல்!

Published

on

டெல்லி மற்றும் புதுச்சேரி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி – புதுச்சேரி இடையே ஜூலை 17ஆம் தேதியிலிருந்து வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் டெல்லியில் இருந்தும், வாரந்தோறும் புதன்கிழமைகளில் புதுச்சேரியிலிருந்து இந்த சிறப்பு ரயில் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கும் என்றும் டெல்லி – புதுச்சேரி இடையே பயணம் செய்யும் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுவரை புதுவையில் உள்ளவர்கள் டெல்லி செல்ல வேண்டுமென்றால் சென்னை வந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் தற்போது நேரடியாக புதுவையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில் வாரம்தோறும் விடப்பட்டுள்ளது புதுவை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த ரயிலை வாரம் இருமுறை இயக்க எதிர்காலத்தில் வழிவகை செய்ய வேண்டும் என புதுச்சேரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending

Exit mobile version