Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன்கள் (ஜூலை 21 முதல் 27 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

துணிச்சலுடன் செயல்பட நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த பயணங்கள் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் நல்ல பெயர் கிட்டும். மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளைத் தருவார்கள்.

குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். பிள்ளைகள் மூலம் மனக்கஷ்டம் ஏற்பட்டு நீங்கும்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

பரிகாரம்: முருகனுக்கு செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

**************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

நேர்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மிக அனுகூலமான பலன்களை அடையப் போகிறீர்கள். எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரத்து அதிகரிக்கும். ஆனாலும் வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரனையால் சந்தோஷம் கொள்வீர்கள்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வீடு மனை சார்ந்த முயற்சிகள் எடுக்கும் போது கவனம் தேவை.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும்.

மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. தேர்விற்கு மனதை சிதற விடாமல் சிரத்தை எடுப்பது நன்மை தரும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை சுண்டல் செய்து நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி

**************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தனது அன்பால் அனைவரையும் வசீகரிக்கும் மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு இருக்கும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு வியாபாரம் அனுகூலத்தைத் தரும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மேலிடத்தில் இருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் மீது பரிவும், அன்பும், கருணையும் அதிக அள்வில் பண வரவும், திருப்தியும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பெண்கள் நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்

************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எதையுமே வெளிப்படையாக உடைத்து கூறும் கடக ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கு நன்மையே நடக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்

தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் கிட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.

பெண்கள் உங்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம் தேவை. கெட்ட நண்பர்களின் சகவாசத்தை உடனடியாக கைவிடுவது சிறந்தது.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

***********************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

தனது உணர்வுகளை செயல்படுத்த நினைக்கும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும்.

தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளின் மதிப்பு உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதூகலம் பெறுவீர்கள்.

குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கை துணை உங்களை அனுசரித்து செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர் காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப்படும்.

பெண்கள் தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும்.

மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் கல்விக்கான உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.

பரிகாரம்: வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

உழைத்து சாதிக்க நினைக்கும் கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பண வரத்தில் நிறைவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கூட்டு வியாபாரம் திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்திருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.

குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்கள் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கால தாமதமான நிலை காணப்படும்.

பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

***********************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

தனது சேமிப்பை அதிகரித்துக் கொள்ளவேண்டுமென்று நினைக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது

தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. மேலிடத்தின் அனுசரனையால் திக்கு முக்காடிப் போவீர்கள். எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: கெஜலட்சுமியை பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

****************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

உழைப்பில் உயர வேண்டும் என்று விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகவார்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும்.

பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

********************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

அனைவருக்கும் மதிப்பளிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் சகோதரர்கள் வகையில் இருந்த மனத்தாங்கல் மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனையில் இழுபறியான நிலை காணப்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளி போடுவது நல்லது. துணைத் தொழில் ஆரம்பிக்க எண்ணுபவர்கள் அதற்கான வேலைகளில் இறங்கலாம்.

உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கௌரவம் அளிப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் களையப்பட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வீட்டிற்கு யாராவது ஒரு விருந்தினர்கள் அவசியம் வந்து செல்வார்கள். அவர்கள் மூலம் உங்களுக்கு நன்மை நடக்கும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். அலுவலகம் செல்வோருக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமான மனநிலை காணப்படும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

********************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்க நினைக்கும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும்

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். தொழிலாளர்களால் மிகுந்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும்.

குடும்பம் அமைதியாக இருக்கும். பிறரின் பேச்சுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள். சிலரின் பேச்சில் உள் அர்த்தம் இருக்கும். கவலை இருக்கும் வெளியில் காட்ட மாட்டீர்கள்.

பெண்கள் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும். காரிய தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

******************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கொடுத்தவாக்கை காப்பாற்ற நினைக்கும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் லாபத்திற்கு பஞ்சமிருக்காது. வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமானாலும் கட்டாயம் கிடைக்கும். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. எடுத்த வேலைகளை மிகச்சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

குடும்பத்தில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது உங்களுக்கு நல்லது. கவலை இருந்த இடம் தெரியாமல் போகும்.. பெரியோர் ஆசி கிடைக்கப் பெ
றுவீர்கள். நல்லதே நடக்கும். கவலை வேண்டாம்.

பெண்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும்.

பரிகாரம்: ஆஞ்சனேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்க குடும்ப கஷ்டங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

*****************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அடுத்தவர்கள் கஷ்டத்தை சரிசெய்ய நினைக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் நிறுவன பங்குகள் உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவும் இருக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

குடும்பத்தில் சாதாரண பிரச்சினைகளுக்கு கூட மௌனமாக இருந்து விடுவது உத்தமம். நீண்ட நாளைய கனவுகள் உங்களுக்கு பலிதமாகும். வேறு ஒருவரும் உங்களை கை காட்ட முடியாதவாறு நடந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவது கிடைக்காமல் போகலாம். அதிக சிரத்தை எடுப்பது நன்மை தரும்.

பரிகாரம்: அம்மனை பாடல்கள் பாடி வழிபட துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், சனி

**************************

author avatar
seithichurul
வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா8 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!