Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான இந்த வாரபலன் (ஆகஸ்ட் 11 முதல் 17 வரை)

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

மிரளான நடையுடன் நடைபோடும் மேஷ ராசி அன்பர்களே, நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். எந்த காரியத்திலும் பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். உறவினர்கள் மூலம் நன்மைகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, செவ்வாய், சனி

******************************************************************************************************

ரிஷபம்:

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும்  ரிஷப ராசி அன்பர்களே, நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த வாரம் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அதிக லாபங்கள் பெறுவீர்கள்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். மூத்த சகோதரர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும். வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்பவர்கள் முயற்சி வெற்றி பெறும். திருமண காரியங்களை ஒத்திப் போட வேண்டாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். செயல்களில் இருக்கும் காரிய தடைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பரிகாரம்:  ஸ்ரீ ஆஞ்சநேய பகவானை வெண்ணெய் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வெள்ளி, புதன்

******************************************************************************************

மிதுனம்:

ஓரளவு வருமானத்தை எதிர் பார்க்கும் மிதுன ராசி அன்பர்களே,  நீங்கள் கேளிக்கையில் ஈடுபாடு உடையவர். இந்த வாரம் உங்களுக்கு சில பிரச்சினைகளை தீர்த்து வைக்க நண்பர்கள் சிலர் முயற்சி செய்வார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் சற்று தள்ளிப் போகலாம். தொலை தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு நிம்மதி அளிக்கும். சிலருக்கு வயிறு சம்மந்தமான உபாதைகள் ஏற்படலாம். உடனே மருத்துவரிடம் சென்று வரவும். அலட்சியம் வேண்டாம்.

பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். சிலருடைய அறிவுரைய நீங்கள் கேட்க வேண்டி வரும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும். கல்விச் சுற்றுலா சென்று வருவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, புதன், திங்கள்

******************************************************************************************

கடகம்

வீடு,  மனை , வியாபாரம் ஆகியவற்றில் ஆதாயத்தைப் பார்க்கப் போகும் கடக ராசி அன்பர்களே,  இந்த வாரம் மனதில் நிம்மதி குடி கொண்டிருக்கும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடிதனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அதுவும் தாங்கள் விரும்பிய இடத்திலேயே கை நிறைய சம்பளத்துடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக  வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை.  பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. அவர்களின் எதிர்காலத்திற்காக சில நல்ல திட்டங்களை செய்து முடிப்பீர்கள். முன் பின் தெரியாதவர்களுக்கு உதவ வேண்டாம். ஏதாவது பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ள நேரிடும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். முன்பு இருந்த பிரச்சனைகள் குறையும்.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள். சக நண்பர்கள் உதவிக்கு வருவார்கள்.

பரிகாரம்: விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, திங்கள், சனி

******************************************************************************************

சிம்மம்:

மகிழ்ச்சியான சம்பவங்களுக்காக காத்திருக்கும்  சிம்ம ராசி அன்பர்களே, இந்த வாரம் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தை நடக்கும். விருந்து, கேளிக்கை போன்ற மனதிற்கு சந்தோஷம் ஏற்படுத்தும் வகையில் சூழ்நிலை உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும். கேட்கும் சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். சின்ன சின்ன விசயங்களுக்காக கோபப்பட வேண்டாம். விட்டுக் கொடுத்து போவதால் நன்மைகள் அதிக அளவில் பெறுவீர்கள். தந்தையார் மூலம் ஆதாயத்தையும் பெறுவீர்கள்.

பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, ஞாயிறு, வியாழன்

******************************************************************************************

கன்னி:

கணிவான பேச்சில் மயங்கி விடும்  கன்னி ராசி அன்பர்களே, இந்த வாரம் நிதி நிலைமை நல்லபடி இருக்கும் என்றாலும் எதிர்பாராத வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். வருமானம் திருப்தி தருவதால் அதைச் சமாளித்து விடுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட  குறையலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. சக பணியாளர்களிடம் நல்லுறவை வைத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். தீவிரமாக முயன்று உறவினர் ஒருவரின் திருமணத்தை முடித்து வைப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வெளியூர் பிரயாணங்கள் மூலம் வெற்றி கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். உறவினர்களால் மனக்கவலை ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: சென்னையிலுள்ள சென்ன கேசவபெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, புதன், சனி

******************************************************************************************

துலாம்:

துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத  துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம்.

தொழில் அதீத வேகத்துடன் நடைபெறும். முன்பு இருந்த தொய்வு நிலை மாறி அதிக லாபத்தைப் பெறப் போகிறீர்கள். பங்குதாரர்களிடமிருந்து வந்த மனக் கிலேசம் மாறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். நிரந்தர நோயினால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு அதிலிருந்து சற்று அந்நிலை மாறி நல்ல குணம் ஏற்படும். தற்போதிருந்து வரும் வீட்டிலிருந்து வேறொரு வசதியான வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு சிலருக்கு அமைந்துள்ளது.

பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும்.

மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும்.  எச்சரிக்கையாக பேசுவது நல்லது

பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வெள்ளி, ஞாயிறு

******************************************************************************************

விருச்சிகம்:

விருந்தினர்களை உபசரிக்க விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் எல்லாவற்றிலும் வெற்றியைக் காண்பீர்கள். நிதி நிலைமைக் கட்டுக்குள் இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த லாபம் குறையக்கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் ஏதாவது சில்லறை சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். திருமண வயதினர்களாக இருந்தால் திருமண வாய்ப்பு கட்டாயம் ஏற்படும். உடல் நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. விருந்தினர்கள் இல்லத்திற்கு வந்து போவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

பரிகாரம்:  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, செவ்வாய், வெள்ளி

******************************************************************************************

தனுசு:

தன்னலத்தை மட்டும் கருதாமல்  பிறர் நலனுக்காகவும் பாடுபடும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் உழைப்புக் கேற்ற பலனும் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும். நீங்கள் அமைதியாக இருந்தாலும் சில பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். சிலர் வழக்கு, வியாஜ்ஜியங்களில் மாட்டிக் கொள்ள நேரும். ஆனாலும் பயப்பட வேண்டாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: திருநீர்மலை நீலமுகில் வண்ண பெருமாளை  அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வியாழன், ஞாயிறு

******************************************************************************************

மகரம்:

மன நிம்மதியைப் பெறப் போகும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் மிகவும் அலைச்சல் இருக்கும். ஆனாலும் மன நிம்மதி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். திருமணவயதிலுள்ளவர்கள் இப்பொழுது திருமணத்திற்கு சம்மதிப்பார்கள். அது பெற்றோருக்கு மன நிறைவைத் தரும். புதிய வீடு, வாகனம் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். தாயார் வழி உறவினர்கள் ஒருவரைச் சந்திப்பீர்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். யாரிடமும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, சனி, திங்கள்

******************************************************************************************

கும்பம்:

செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் பணவரவிற்கு குறைவிருக்காது. ஆனால் வரவிற்கு ஏற்ற செலவுகள் இருந்து கொண்டே தான் இருக்கும்

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண்அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். வேலைகளை செய்து முடிக்க சிரமப் பட வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக  பேசுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண வயதிலுள்ளவர்கள் திருமண முயற்சிகளில் இறங்கலாம். மூத்த சகோதரர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு ஆதரவு தருவார்கள். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரலாம்.

பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, சனி, செவ்வாய்

******************************************************************************************************

மீனம்:

வருமானத்தை அதிகம் எதிர் பார்க்கும் மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் பொதுவாக வருமானம் நல்லபடி இருக்கும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். சக ஊழியர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு பின்பு அகலும். வெளியூர் பிரயாணம் ஏற்பட வாய்ப்புண்டு.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும். செலவுகள் ஏற்பட்டாலும் அதை உங்களால் சமாளித்து விட முடியும். ஒரு கடனை அடைப்பதற்கு மற்றொரு கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். விலையுயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் தேவை.

பெண்கள் சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக் கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வியாழன், திங்கள்

******************************************************************************************************

 

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!