Connect with us

வார பலன்

உங்கள் ராசிக்கான ஆகஸ்ட் 25 முதல் 31 வரையிலான வாரபலன்!

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்ற மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் ஏதாவது ஒரு கவலை மனதில் இருக்கும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழிலாளர்களுடன் நல்லுறவு கிட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகனயோகம் உண்டாகும். ரகசியத்தை யாரிடமும் கூற வேண்டாம்.

குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து தாமதமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். வீட்டில் இருந்த பிரச்சனைகள் குறையும்.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் அனைத்து பாடங்களையும்  பாடங்களை படிப்பீர்கள்.

பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வர மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, செவ்வாய், புதன்

**********************************************************************************

ரிஷபம்:

எதிலும் திருப்தி இல்லாத நிலையில் இருக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் மனக்கவலை உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம் இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. இல்லத்திற்கு உறவினர்கள் வருகை இருக்கும். தேவையான இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிக்கன நடவடிக்கைகளின் மூலம் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை பெற முடியும்.

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசத்தை தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வெள்ளி, செவ்வாய்

**********************************************************************************

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இந்த வாரம் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது. லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது.

குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

பரிகாரம்: வடலூர் ராமலிங்க சுவாமிகளை வணங்கி ஜோதி தரிசனம் செய்வது மன அமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, புதன், வெள்ளி

**********************************************************************************

கடகம்:

வாடிக்கையாளர்கள் மூலம் நன்மையை அடையப் போகும் கடக ராசி அன்பர்களே, நீங்கள் வைராக்கியம் மிக்கவர். இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தாய் தந்தையரை சமாளிக்க வேண்டி வரும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து நன்மையை அடைவீர்கள்.

பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, திங்கள், சனி

**********************************************************************************

சிம்மம்:

சிக்கலான விசயங்களை எதிர்கொள்ளும் சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைப்பவர். இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின்  மூலம் லாபம் உண்டாகும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

பரிகாரம்:  ஸ்ரீ ஆஞ்சநேய பகவானை வெண்ணெய் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, ஞாயிறு, செவ்வாய்

**********************************************************************************

கன்னி:

கணிவான பேச்சால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் கேளிக்கையில் ஈடுபாடு உடையவர். இந்த வாரம் பிரயாணத்தில் தடங்கல் ஏற்படும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண்மூடிதனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபம் அதிகரிக்க செய்யும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகள் உங்கள் பேச்சை மதிப்பார்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இதமான உறவு காணப்படும்.  பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். எந்த காரியத்தையும் கடின பிரயாசைக்கு பிறகே செய்ய வேண்டி இருக்கும். வாகன லாபம் ஏற்படும். எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.

பெண்கள் எந்த ஒரு வேலையையும் விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். வேலைப்பளுவால் சரியான நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது..

பரிகாரம்: ஸ்ரீராகவேந்திரரை பூஜித்து வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, புதன், வெள்ளி

**********************************************************************************

துலாம்

சிக்கலான நேரத்திலும் தெளிவான முடிவுகளை எடுக்கும் துலா ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் கூடுதல் செலவு உண்டானாலும் பணவரத்து அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்க ஆர்வம் உண்டாகும். இல்லத்தில் இதமான சூழ்நிலை உருவாக குல தெய்வத்தை வழிபடுங்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புத்திசாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். சக மாணவர்களுடன் நட்புடன் இருங்கள்.

பரிகாரம்: கார்த்திகை தினத்தில் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வெள்ளி, புதன்

**********************************************************************************

விருச்சிகம்:

வித்தியாசமான வழியில் காரியத்தை நடத்தி முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் ஏற்படும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தை பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்களைப் பெற முயற்சிப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு வீண் அலைச்சல் இருக்கும். சக பணியாளர்களிடம் எந்தவித ரகசியத்தையும் கூற வேண்டாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம்.

பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, செவ்வாய், சனி

**********************************************************************************

தனுசு:

தன்னடக்கத்துடன் நடந்து கொள்ளும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதூரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக நடந்து முடியும். எந்த வேலையையும் செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம்.

பெண்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். ஆசிரியர்கள் முன்வந்து பாராட்டுவார்கள்.

பரிகாரம்: சென்னையிலுள்ள சென்ன கேசவபெருமாளை புதன்கிழமையில் தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வியாழன், வெள்ளி

**********************************************************************************

மகரம்:

மறக்க முடியாத நினைவுகளை கொண்டுள்ள் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்சனைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான  நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை  வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். ஏற்கனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். மனநிம்மதியும், மனோதிடமும் இருப்பதால் எந்த காரியத்திலும் சாதகமான பலனைக் காணலாம்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.

மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாக புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். கல்வி உதவித் தொகைக்காக காத்திருப்போருக்கு அது இப்போது கிடைக்கும்.

பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, சனி, வியாழன்

**********************************************************************************

கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பண வரத்து அதிகரிக்கும். வீண் அலைச்சல் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எதிலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவது வெற்றிக்கு உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்குவமாக செயல்படுவது நல்லது. திடீர் நெருக்கடிகள் ஏற்படுவதால் மனதில் நிம்மதி குறையலாம்.

குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும். அவ்வப்போது வந்த பிரச்சினைகள் சற்று குறைந்து விடும். ஆடை, அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரலாம். ஆனால் எந்தக் காரியத்திலும் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகிறது.

பெண்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்:  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, சனி, ஞாயிறு

*******************************************************************************************************************

மீனம்:

மீன ராசி அன்பர்களே, இந்த வாரம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை  மற்றவர்கள்  தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து  முடிவில் சாதகமான பலன்தரும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலகப் பணிகள் காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் நல்ல செய்திகளாக இருக்கும். குடும்பத்தில் உங்களது கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்காது. வேடிக்கை, வினோத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு காரியங்கள் செய்து முடிப்பதில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பமும் உண்டாகும்.

மாணவர்களுக்கு முன்பு படித்தது இப்போது கை கொடுக்கும். பொறுப்புகள் கூடும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

பரிகாரம்:  திருநீர்மலை நீலமுகில் வண்ண பெருமாளை  அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:, வியாழன், சனி

**********************************************************************************

 

author avatar
seithichurul
வணிகம்4 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!