Connect with us

வார பலன்

வார பலன் 2018 டிசம்பர் 23 முதல் 29 வரை

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

மேஷம்:

உள்ளத்தில் நல்லதேயே நினைக்கும் மேஷ ராசி அன்பர்களே, . இந்த வாரம் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள்.

குடும்பத்தில் பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மை நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.  அதே நேரத்தில் அவர்களால் செலவும் வரும்.

பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

 

ரிஷபம்:

எண்ணியபடி காரியத்தை நிறைவேற்றும் ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன்  அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம்.

பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

பரிகாரம்:  ஸ்ரீரங்கநாதரை தரிசித்து வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

 

மிதுனம்:

பெரிய காரியங்களைக் கூட எளிதில் செய்து முடிக்கக் கூடிய  மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில்  ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக  மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.

பரிகாரம்: துர்க்கை  அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள்  நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

 

கடகம்:

என்றும் இளமையாக தோன்றும் கடக ராசி அன்பர்களே இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.  பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.  வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்

 

சிம்மம்:

எல்லோர் மனதிலும் இடம்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!. இந்த வாரம் குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே  திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.  சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைவார்கள்.

குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம்.

பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.  எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.  

பரிகாரம்:  விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

 

கன்னி:

எண்ணங்கள் ஈடேற பாடுபடும் கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் வீண் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில்  தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு  விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு  ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை.

மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

 

துலாம்:

பூர்விக சொத்துகளினால் வரும் பிரச்ச்னைகளை சந்திக்கும் துலா ராசி அன்பர்களே! இந்த வாரம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது  வியாபாரம் நன்கு நடக்க உதவும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன்  அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.   

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து சிவனை வணங்குவது நன்மையை தரும். தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

 

விருச்சிகம்:

உயர்வான சிந்தனையுடைய விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை  குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

பரிகாரம்:  மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். காரிய தடங்கல் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

***********************************************************************************

தனுசு:

காண்பவரை வசியமடையச் செய்யும் தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் பணவரவு அதிகமாகும். வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த படி கிடைக்கும்.  வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப் போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.

குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.   கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  

மாணவர்களுக்கு  சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் அர்ப்பணித்து வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

***********************************************************************************

மகரம்:

சொன்னச்சொல்படி நடந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே! இந்த வாரம் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்  திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும்.

பெண்களுக்கு  எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.

மாணவர்களுக்கு  கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  வராஹப் பெருமாளை தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

***********************************************************************************

கும்பம்:

வீண் விரயங்களை தவிர்க்கும் கும்ப ராசி அன்பர்களே! இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண் கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான  அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

***********************************************************************************

மீனம்:

கலையின் மீது பற்று கொண்ட மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல்  ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம்.

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும்.

குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியழன்

***********************************************************************************

author avatar
seithichurul
வணிகம்22 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!