இந்தியா

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: மத்திய அரசின் புதிய திட்டம்!

Published

on

தற்போது வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை நாள் மற்றும் ஒரு நாள் விடுமுறை என்ற நிலையில் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாள் மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது தினமும் 8 மணி நேரம் வேலை என்ற அளவில் வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணிநேரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நடைமுறையை மாற்றி, வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்றும் அதற்கு பதிலாக தினமும் 12 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்றும் அதன்படி 48 மணி நேரம் வேலை என்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் ஒரு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

vasudeva-industrial-services-verna-goa-security-services-yd7vc

இந்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா அவர்கள் உறுதி செய்துள்ளார். இருப்பினும் தொழிலாளர்களையோ அல்லது நிறுவனத்தின் முதலாளிகளையோ எந்தவித நிர்ப்பந்தமும் செய்யப்போவதில்லை என்றும் மாறிவரும் காலத்திற்கு ஏற்ற வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வந்தால் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version