இந்தியா

சிறைக்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் மகனுக்கு திருமணத்தை நிச்சயித்த சாந்தா – தீபக் தம்பதி!

Published

on

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரான சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தனது மகனின் திருமணம் குறித்த தேதியை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சாந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு சுமார் 3000 கோடி கடன் வழங்கியதாகவும் அந்த கடன் தொகை அவரது கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அதன்பின்னர் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் வீடியோகான் நிறுவனத்தின் வேணுகோபால் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சாந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் தங்கள் மகன் அர்ஜூன் கோச்சார் திருமணத்தை நடத்துவதற்காக தேதியை நிர்ணயம் செய்து தாஜ் ஹோட்டலுக்கும் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மகன் அர்ஜூன் திருமண தேதியை முடிவு செய்த ஒரு சில மணி நேரங்களில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத். அர்ஜுன் கோச்சார் யேல் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து உள்ளதாகவும் அதன் பிறகு நியூயார்க்கில் உள்ள நிறுவனம் ஒன்றில் வணிக ஆய்வாளராக பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version