50 ஆண்டு, 5 மொழிகள்

லேடி சூப்பர் ஸ்டார் 

ஸ்ரீதேவி

தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம் பட்டியில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி.

1969-ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார் ஸ்ரீதேவி.

கதாநாயகியாக ஸ்ரீதேவி நடித்த முதல் படம் கே.பாலச்சந்திரன் மூன்று முடிச்சு.

ஆரம்பக் காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்

தனது நடிப்பிற்காகத் தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார்.

இது வரை 300 படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். இவரது கடைசி படமே 300வது படமாக அமைந்தது.

கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர் பெற்றார்.

ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

2018-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24-ம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாகக் காலமானார் என செய்திகள் வெளியானது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கி இறந்ததாகவும், ரத்தத்தில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.