ஒலிம்பிக் 2020, கொரோனா ஊரடங்கு காரணமாக, ஜப்பானின் டோக்கியோவில் 2021-ம் ஆண்டு நடைபெற்றது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா இதற்கு முன்பு 6 பதக்கங்களை வென்றதுதான் சாதனையாக இருந்தது.
இந்தாண்டு ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
மீரா பாய் சானு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்தியர்கள் இருந்த போது, பளு தூக்கும் போட்டியில், 49 கிலோ எடை பிரிவில் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.