Twitter

டிவிட்டரில் சாதனை  படைத்த  வலிமை!

Green Blob

வலிமை படத்திலிருந்து அண்மையில் வெளியான நாங்க வேற மாதிரி படத்தின் பாடல் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Green Blob

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் படம் விலிமை. அஜித் நடிப்பில் நீண்ட காலமாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் அவரது ரசிகர்கள் வலிமை படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Green Blob

இந்நிலையில் 2021-ம் ஆண்டின் முதல் பாதி வரை இந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் டிவிட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் எவை என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

Green Blob

இந்த பட்டியலில் முதலிடத்தை வலிமை படம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை மாஸ்டர் பிடித்துள்ளது. 3-ம் இடத்தை சர்காரு வாரி பட்டா தெலுங்கு படம் பிடித்துள்ளது.

Green Blob

4-ம் இடத்தை அஜித் குமார் ஹேஷ்டேக் பிடித்துள்ளது. 5-ம் இடத்தை தளபதி 65 ஹேஷ்டேக் பிடித்துள்ளது. கோவிட்-19 ஹேஷ்டேக் 9வது இடத்தை பிடித்துள்ளது.

Green Blob

பிடிஎஸ் பேண்ட் ஹேஷ்டேக் 8வது இடத்தை பிடித்துள்ளது.

Green Blob

பவன் கல்யாணின் வக்கீல் சாப் படம் 10வது இடத்தை பிடித்துள்ளது.

Green Blob

வலிமை படம் முதலிடம் பிடிக்கக் காரணம், வலிமை அப்டேட் குறித்து அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியது, வலிமை ஃபர்ஸ்ட் லுக் போச்டர், மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியானது உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

Green Blob

இந்த ஆண்டு இறுதிக்குள் வலிமை ஹேஷ்டேக்-ஐ முந்த பீஸ்ட், அண்ணாத்த படங்களுக்கு அதிக வாய்ப்புள்ளது.