தமிழ்நாடு

நிவர் புயல் எங்கு, எப்போது கரையை கடக்கும்.. வெதர்மேன் சொல்வது என்ன?

Published

on

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், எங்கு, எப்போது கடக்கும் என்ற முக்கியமான சில தகவல்களைத் தமிழக வெதர்மேன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புயல் இன்னும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 100 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் இயங்கி வருகிறது.

இதுவரை குறிப்பாக இந்த பகுதியில்தான் புயல் கடக்கும் என்ற துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் புதுவை – சென்னை இடையில் மகாபலிபுரம் அருகில் புயல் கடக்க வாய்ப்புள்ளது.

நிவர் புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கும்?

நிவர் புயல் 25-ம் தேதி இரவு அல்லது 26-ம் தேதி காலை கரையைக் கடக்கும். மகாபலிபுரம், சென்னை இடையில் பெரும் இடைவெளி இல்லை என்பதால், சில மாற்றங்கள் ஏற்பட்டால் சென்னையில் கூட நிவர் புயல் கடக்க அதிக வாய்ப்புள்ளது.

நிவர் புயல் கஜா புயலை விட தீவிரமாக உருவாகி வருகிறதா?

தற்போது உள்ள சூழலை வைத்துப் பார்க்கும் போது நிவர் புயல் வலுவிலக்க வாய்ப்பில்லை. கஜா புயலை விட அதிகமான தாக்கத்தை நிவர் புயல் ஏற்படுத்தும்.

எங்கெல்லாம் கனமழை இருக்கும்?

சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழையும், காஞ்சிபுரம், திருவள்ளூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.

seithichurul

Trending

Exit mobile version