செய்திகள்

பணம் வீடு தேடி வர கிருஷ்ண ஜெயந்தியில் இதை செய்யுங்கள்!

Published

on

மகாவிஷ்ணுவின் 9-வது அவதாரமாகும் கிருஷ்ணர், அவதரித்த நாளாக கிருஷ்ண ஜெயந்தியை நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு, ஆகஸ்ட் 26 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி வருகிறது.

இந்த நாளில் கிருஷ்ணருக்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உட்பட பல நன்மைகளைப் பெறலாம் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில் நீங்கள் எந்த பொருட்களை கிருஷ்ணருக்கு படைத்தால், அவர் அருள் பொழியும் என்பதை இங்கு பார்க்கலாம்.

மலர்கள்: கிருஷ்ணரின் பொற்பாதங்களுக்கு மலர்களை அர்ப்பணிப்பது மிகுந்த ஆசியை தரும். மலர்களை 3 அல்லது அதன் மடங்கு எண்ணிக்கையில் அர்ப்பணம் செய்ய வேண்டும். பூக்களின் காம்புகள் பகவானை நோக்க வேண்டும். தாழம்பூ, சந்தனம், மல்லிகை போன்ற நறுமணம் உடைய ஊதுபத்திகளை பயன்படுத்துவது சிறந்தது.

மயிலிறகு: கிருஷ்ணரின் முக்கிய அடையாளமான மயிலிறகை பூஜையில் வைத்து வழிபட்டால், அவரது பூரண அருள் கிடைக்கும். மயிலிறகு, தெய்வீக சக்தியை ஈர்த்துக்கொள்வதில் சிறந்தது.

துளசி: பகவத் கீதையில் கிருஷ்ணர், “துளசி இலை, 1 புஷ்பம், ஒரு உத்தரணி தீர்த்தம்” என்ற மூன்று பொருட்களை படைத்தால் திருப்தியாவேன் என்கிறார். துளசியை அர்ப்பணிப்பதால் பொருளாதார சிக்கல்கள் நீங்கி செல்வம் வளரும்.

அவல்: கிருஷ்ணரின் பிரியமான உணவான அவலை புதியதாக வாங்கி அவல் பாயசம் செய்து படைத்து, பின்னர் அருகிலுள்ள குழந்தைகளுக்கு வழங்கினால், மேலும் புண்ணியம் கிடைக்கும்.

அன்னதானம்: கிருஷ்ண ஜெயந்தி நாளில், உணவில்லாதவர்களுக்கு அன்னதானம் செய்தால், கிருஷ்ணரின் இரக்கம் மற்றும் பூரண அருளை பெற்றிடலாம்.

 

Poovizhi

Trending

Exit mobile version