இந்தியா

அடுத்த 3 மாதங்களில் டெல்லியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்: கெஜ்ரிவால் திட்டவட்டம்

Published

on

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த 3 மாதங்களில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதிபட கூறியுள்ளார்.

தற்போது டெல்லியில் ஒரு நாளைக்கு 1 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இது 3 லட்சம் வரை உயர்த்தப்பட்டால் மட்டுமே, 3 மாதங்களில் டெல்லி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால், ‘டெல்லிக்கு அருகாமைலிய் உள்ள ஃபரிதாபாத், காசியாபாத், சோனிபாட், குர்கான், நொய்டா போன்ற பகுதிகளில் இருந்து டெல்லி மாநகருக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள். இங்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கும் காரணத்தினால் அதிக அண்டை மாநிலத்தவர்கள் இங்கு வருகிறார்கள்.

ஆனால் நம்மிடம் அவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை. நமக்குப் போதுமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும் பட்சத்தில் மூன்றே மாதங்களில் மொத்த மக்கள் தொகைக்கும் அதைச் செலுத்தி முடிக்க முடியும்.

டெல்லிக்குத் தற்போது வரை 40 லட்சம் டோஸ்கள் கிடைத்திருக்கின்றன. நம் மாநிலத்தில் மொத்தமாக சுமார் 4 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசித் தேவைப்படுகிறது. எனவே ஒரு மாதத்துக்கு 80 முதல் 85 லட்சம் டோஸ்கள் கிடைத்தால் மொத்த மக்கள் தொகைக்கும் நம்மால் மூன்றே மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version