தமிழ்நாடு

மாவீரன் அண்ணாமலையை கர்நாடகாவுக்கு தூதுவராக அனுப்புவோம்: தயாநிதி மாறன் பேட்டி

Published

on

மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை கர்நாடக மாநிலத்திற்கு தூதுவராக அனுப்புவோம் என தயாநிதிமாறன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் உறுதியாக உள்ளனர்

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இது குறித்து தமிழக அமைச்சர்கள் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் பிரதமரை நேரில் சந்தித்து தங்கள் மாநிலத்திற்கான கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் போராட்டம் இருக்க போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கட்சியைச் சேர்ந்தவர்தான் கர்நாடக மாநிலத்தில் முதல்வர் என்ற நிலையில் அவர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தாமல் தமிழகத்தில் உண்ணாவிரதம் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது

இந்த நிலையில் யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவது உறுதி என கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து இன்று பேட்டியளித்த திமுக எம்பி தயாநிதி மாறன் கர்நாடக முதலமைச்சர் உடன் பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version