இந்தியா

ஸ்டெர்லைட்டை 2 மாதத்தில் திறக்க போகிறோம்.. சிஇஓ ராம்நாத் அதிர்ச்சி பேட்டி!

Published

on

தூத்துக்குடி: பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவெடுத்து இருக்கிறோம் என்று ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் பேட்டி பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இனி எப்போது வேண்டுமானாலும் இந்த ஆலை திறக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் இன்று சென்னையில் பேட்டியளித்தார்.

அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் 3 பேர் கொண்டு கமிட்டியை அமைத்து இருந்தது.அந்த கமிட்டி ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு நடத்தியது. மக்கள், அதிகாரிகள் பலரிடம் அந்த கமிட்டி விசாரணை செய்தது.அந்த கமிட்டியின் அறிக்கையின் பேரிலேயே எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. கமிட்டியின் அறிக்கையில் எங்களுக்கு எதிராக கருத்து இல்லை.

பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முடிவில் உள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஸ்டெர்லைட் ஆலை செயல்படும். எல்லோரின் முழு அனுமதியுடன்தான் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க போகிறோம், என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version