சினிமா

’ஆஸ்கருக்காக செலவு செய்தோம்’: உண்மையை உடைத்த ராஜமெளலி தரப்பு!

Published

on

ஆஸ்கர் விருதுகளுக்கு செலவு செய்தோம் என இயக்குநர் ராஜமெளலி தரப்பு பேசியுள்ளது.

கடந்த மார்ச் 12ம் தேதி 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் ’ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதே சமயம், இந்தியா சார்பில் இந்தப் படம் அனுப்பபடாத நிலையில், ஆஸ்கர் விருதுகளைப் பெற இயக்குநர் ராஜமெளலி அமெரிக்காவில் தங்கி கோடிக்கணக்கில் செலவு செய்தார் என்ற பேச்சு இணையத்தில் எழுந்தது.

மேலும், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சிலரும் ராஜமெளலி ஆஸ்கர் விருதைப் பெற செலவு செய்து வருகிறார் என்று சொன்னதும் இதற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்தது. இந்த நிலையில், இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயன் சமீபத்தில் கொடுத்திருக்கக்கூடிய பேட்டியில் இதுகுறித்து பேசி இருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை அனுப்பாமல் போனது வருத்தம். அதனால், தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் என் தந்தை வாங்கினார் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

ஆஸ்கர் விருதுகளை அப்படி யாரும் வாங்கவும் முடியாது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். உண்மையில், ஆஸ்கர் விருதுக்கான நடைமுறையில் படத்தை பரப்புரை செய்வதற்கு நாங்கள் திட்டமிட்டு இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்ய இருந்தோம். பின்பு, நாமினேஷனுக்கு போனதும் 8.5 கோடி வரை செலவு செய்தோம். இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகை” என்று வெளிப்படையாக பேசி இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version