தமிழ்நாடு

சசிகலாவை அதிமுகவில் இணைக்க கட்டாயப்படுத்தப்படுகிறதா? அமைச்சர் ஜெயகுமார் பதில்!

Published

on

சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று 4 வருட தண்டனைக்கு பின் விடுதலையான சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள கெஞ்சிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவுடன் அமமுகவை இணைக்கவும், சசிகலாவை அதிமுகவில் இணைக்கவும் பாஜக தீவிர முயற்சி செய்து வருவதாகவும், கூட்டணி குறித்து தொகுதி உடன்பாடு குறித்து பேசும் போது இதனை ஒரு நிபந்தனையாக பாஜக அதிமுகவுக்கு வைப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிபந்தனை காரணமாகத்தான் அதிமுக-பாஜக கூட்டணி தொகுதி உடன்பாட்டில் இழுபறி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் ’சசிகலாவை அதிமுகவில் இணைப்பது சாத்தியமே இல்லை என்று கூறினார். அதிமுகவில் சசிகலாவை இணைப்பது என்பது பாஜகவின் யோசனையாக இருக்கலாம் என்றும், ஆனால் அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்றும் தெரிவித்தார்., சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version