தமிழ்நாடு

திமுகவை கூட்டணிக்கு யார் கூப்பிட்டது? ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி!

Published

on

சென்னை: பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் கூட்டணி கருத்திற்கு தற்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். டெல்லி பாஜக தேசியக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபின் அவர் பேட்டி அளித்தார்.

அதில், லோக் சபா தேர்தலுக்கு ஆயத்தமாவது பற்றி பாஜக தேசியக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டணி பற்றி தற்போதைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை

பிரதமர் மோடி திமுகவை கூட்டணிக்கு அழைக்கவில்லை. கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியது திமுகவுக்கு அல்ல.

வாஜ்பாய் பாணியில் கூட்டணி என கூறியதை திமுகவுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்? அவர்தான் பாஜகவின் கூட்டணிக்கு ஆசைப்படுகிறார் போல, என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version