கிரிக்கெட்

‘கோலி விக்கெட்ட இப்டிதான் தூக்குவோம்..!’- சவால்விடும் ஆஸி., கோச்

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, ஒருநாள் டி20 தொடர்களை முடித்துக் கொண்டு டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறது. நாளை மறுநாள் 4 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்வதில் விராட் கோலியின் விக்கெட் முக்கிய பங்காற்றும். இந்நிலையில் அவரின் விக்கெட்டைக் கைப்பற்றுவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசியுள்ளார். ‘உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் அவரால் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும். ஆட்டத்தின் போக்கையே தன் பேட்டிங் மூலம் கோலியான் மாற்றிவிட முடியும். இதனால் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். ஆஸ்திரேலிய வீரர்கள் கோபத்தை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி விளையாட முயற்சி செய்வார்கள். விராட் கோலி மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. அவரை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். அவை களத்தில் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் கிரிக்கெட்டில் வலுவான அணிகளாக இருக்கின்றன. இதனால் டெஸ்ட் தொடரானது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அற்புதமான விருந்தாக அமையும். எங்கள் அணியில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம். அதன் மூலம் கோலியின் பேட்டிங்கை நாங்கள் சமாளிப்போம்’ என்று கூறியுள்ளார் லாங்கர்.

 

seithichurul

Trending

Exit mobile version