/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

உலகம்

2 வருடங்களில் 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு அறிக்கை!

Published

on

டெல்லி: கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மாதிரி சர்வே (The National Sample Survey Office’s Periodic Labour Force Survey) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வேலைவாய்ப்பு பிரச்சனை நிகழ்வதாக அறிக்கையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த் தகவலை மத்திய அரசு மறுத்து இருந்தது. மத்திய பாஜக அரசு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது, அதுகுறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறியது.

இந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிக்கை உள்ளது. அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2017-2018ம் வருடம் மட்டும் 251,279 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது, என்றார்.

Trending

Exit mobile version