தமிழ்நாடு

அதிமுக வேண்டாம்.. உறுதியாக சொன்ன அண்ணாமலை.. அது அவருடைய கருத்து.. பாயும் நயினார்

Published

on

சென்னை: கமலாலயத்தில் நேற்று பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதில் அவர் பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்களுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. அது எங்களுக்கு அவசியம் இல்லை.

தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கட்சி வளர்ச்சிதான் எங்களுக்கு முக்கியம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம், என்று சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பாக பேசி உள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து , என்று பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்துப் போட்டியிட்டது இல்லை: தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவிக்க முடியாது, என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து கூட்டணி விவகாரத்தில் தேசிய தலைமையை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளாராம். வரும் 26ம் தேதி பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டு உள்ளாராம்.

seithichurul

Trending

Exit mobile version