இந்தியா

மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு எங்களுக்கு தெரியாது: மத்திய அரசு

Published

on

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய  அரசிடம் அந்த முடிவு அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு மத்திய அரசு காலம் தாழ்த்தியது.

இதனையடுத்து  10% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவுக்கு மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனே அனுமதிக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு விசாரணை நீதிபதி போலே அமர்வில் நடந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதுச்சேரியின் இடஒதுக்கீடு நீட் கொண்டு வந்ததன் நோக்கத்தை நீர்த்துப் போகும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது குறித்து எங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும் கூறினார்.

மாநில அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை மத்திய அரசு குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும், புதுச்சேரி அரசின் 10% இடஒதுக்கீடு முடிவுக்கு மத்திய அரசு காலம் தாழ்த்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் கூறினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக இருப்பதாகவும் கூறினார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் புதுச்சேரி அரசின் முடிவுக்கு உரிய பதிலளிக்கும்படி கூறி, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Trending

Exit mobile version