உலகம்

ரபேல் ஒப்பந்த விவரங்களை வெளியிட முடியாது.. சிஏஜி அறிக்கை!

Published

on

டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் முழுமையான கணக்கு அறிக்கை தயார் செய்யவில்லை, அதனால் அதுகுறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று சிஏஜி தெரிவித்துள்ளது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதில் சிஏஜி வெளியிட்ட ஆதாரங்களை கருத்தில் கொண்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதாவது ரபேல் ஒப்பந்தம் குறித்து சிஏஜி முதற்கட்ட அறிக்கை அளித்ததாகவும், அதை பிஏசி எனப்படும் அரசியல் நடவடிக்கை குழு சோதனை செய்ததாகவும், அந்த அறிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக தரவுகள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது

இந்த நிலையில் மத்திய அரசு இதில் பதில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தது. அதன்படி, சிஏஜி இதுவரை முதற்கட்ட அறிக்கை எதையும் தாக்கல் செய்யவில்லை, அதேபோல் பிஏசி, சிஏஜி அறிக்கை எதையும் சோதனை செய்யவில்லை. நாங்கள் இப்போதுதான் சிஏஜியிடம் விமான ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை பதிவு செய்து இருக்கிறோம் என்று கூறியது.

seithichurul

Trending

Exit mobile version