தமிழ்நாடு

23 தொகுதிகள்: அதிமுகவுக்கு தேமுதிக விடுத்த நிபந்தனை

Published

on

23 தொகுதி கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை இல்லையேல் பேச்சுவார்த்தை இல்லை என தேமுதிக தரப்பிடம் இருந்து அதிமுகவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 25 தொகுதிகள் வரை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக கூட்டணி குறித்து பேசுவதற்காக இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.

அமைச்சர் தங்கமணியின் வீட்டில் நடைபெறுவதாக இருந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக தரப்பிலிருந்து தேமுதிகவுக்கு 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட இருப்பதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த தேமுதிக 23 தொகுதிகள் கொடுக்க ஒப்புக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வருகிறோம் என்றும் இல்லையெனில் பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறி விட்டதாக கூறப்படுகின்றன.

இந்த நிலையில் கமல்ஹாசன் கட்சியுடனும் கூட்டணி அமைக்க தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சசிகலாவுடன் கூட்டணி வைக்கவும் தேமுதிகவின் ஒரு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version