தமிழ்நாடு

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறக்க தயார்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று சேரவில்லை என்பதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும் பள்ளிகள் திறக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டபோது செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு சில வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் என்றும், முதல்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வருவதற்கும் பாடங்கள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் இந்த பேட்டியை அடுத்து செப்டம்பர் 1 முதல் எந்தெந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஒரு வகுப்பிற்கு எத்தனை மாணவர்கள் வரவேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Trending

Exit mobile version