இந்தியா

சாலையை உடைத்து கொண்டு வெளியேறிய தண்ணீர்.. பைப் உடைப்பால் ஏற்பட்ட விபரீதம்..!

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலைக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் வெடித்ததால் சாலை திடீரென விரிசல் ஏற்பட்டு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது சாலைக்கு அட்யில் தான் எண்ணெய் மற்றும் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த குழாய்கள் அவ்வப்போது வெடித்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வரும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் பாதிக்கப்பட்டிருந்த குழாய் திடீரென வெடித்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் அந்த பகுதியில் உள்ள சாலையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்ததோடு அந்த சாலை கடும் சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இது குறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரு சாலை அமைதியாக இருக்கும் நிலையில் அந்த வழியாக ஒரு பெண் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது தரைக்கு அடியில் பாதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் மிகப்பெரிய சத்தத்துடன் பலமாக வெடிக்கிறது. அந்த சாலையின் அருகில் வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சரிந்து விழுகின்றன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் சாலை வெடிப்பின் போது சரியாக கடந்து சென்றதால் அவர் தூக்கி வீசப்படுகிறார். அவர் சிறிய அளவில் காயமடைந்ததாகவும் உடனடியாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரை காப்பாற்றியதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் சில மைல்கள் தூரத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் குழாய் வெடிப்பிலிருந்து வெளியேறிய தண்ணீரின் அழுத்தம் காரணமாக சாலை பெயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாகவும் அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தற்போது குழாயை சரி செய்யும் பணியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிலத்தடியில் பாதிக்கப்பட்ட குழாய் வெடித்ததால் முதலில் பூகம்பம் என்று நான் நினைத்து விட்டேன் என்றும் அதிலிருந்து வந்த தண்ணீரை பார்த்து நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம் என்றும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இதே போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னொரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version