இந்தியா

மும்பையில் அறிமுகமாகிறது வாட்டர் டாக்ஸி சேவை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Published

on

மும்பையில் ஏற்கனவே மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும் மும்பையில் உள்ள மக்கள்தொகை நெருக்கடி காரணமாக தற்போது வாட்டர் டாக்ஸி செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மும்பை நகருக்கு 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவிமும்பை என்ற பகுதிக்கு வாட்டர் டாக்சி சேவை இயக்கப்பட உள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த திட்டம் தற்போது உயிர் பெற்றுள்ளது

முதல் கட்டமாக உள்நாட்டு குரூஸ் டெர்மினல் மற்றும் சர்வதேச குரூஸ் டெர்மினல் ஆகிய இரு இடங்களுக்கு இடையே இந்த வாட்டர் டாக்சி சேவை தொடங்க உள்ளதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் முடிவடையும் என்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

மும்பை மற்றும் நவிமும்பை ஆகிய பகுதிகளை இணைக்க ஏற்கனவே சாலை ரயில் போக்குவரத்து இருக்கும் நிலையில் தற்போது நீர்வழிப் போக்குவரத்தும் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீர்வழி போக்குவரத்து மூலம் மும்பையின் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு பகுதிக்கு 25 நிமிடத்தில் பயணம் செய்யும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது

மேலும் சாலை மார்க்கமாக இருக்கும் போக்குவரத்து நெரிசலும் நீர்வழிப் பாதைகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்டர் டாக்ஸி சேவையை ரூபாய் 200 முதல் 700 வரை கட்டணத்தில் பெறலாம் எனவும் மாதாந்திர பயண அட்டைகளும் வழங்கப்படும் என்றும் இந்த வாட்டர் டாக்ஸி படகுகளில் ஏசி வசதி உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் இந்த வாட்டர் டாக்ஸியில் கார், இருசக்கர வாகனங்களையும் கூட எடுத்துச் செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழி பாதையான வாட்டர் டாக்சி சேவை தொடங்கப்பட இருப்பதால் மும்பை மக்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version