தமிழ்நாடு

IT நிறுவனங்களை வேறு நகரத்திற்கு மாற்ற சொல்லி போராட்டத்தை தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்கள்.!

Published

on

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வாட்டர் கேன் மற்றும் வாட்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னையை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை உறுஞ்சி எடுத்துதான் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் சென்னையின் முக்கியான இடங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தண்ணீர் எடுக்க தடை விதித்துள்ளது.

தண்ணீர் நிறுவனங்களின் மேல்முறையீடு உயர்நீதி மன்றத்தால் நிராகரிக்கபட்ட நிலையில் அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தனியார் நிறுவனங்கள் மூலம் தண்ணீர் உபயோகிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், IT நிறுவனங்கள் மற்றும் வணிக வளங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமாகி வருவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version