தமிழ்நாடு

5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் பெருக்கெடுத்த தண்ணீர்!

Published

on

5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பாலாற்றில் உள்ள காவேரி பாக்கம் தடுப்பணை திறக்கப்பட்டுள்ளதால், பாலாற்றில் கரையோரம் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. காவேரி பாக்கம் தடுப்பணையிலிருந்து சுமார் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2015-ம் ஆண்டு கன மழை பெய்த போது பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அதை தொடர்ந்து இப்போது பாலாற்றில் தண்ணீர் செல்வதைப் பார்க்க மக்கள் கரையோரங்களில் குவிந்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version